பூங்காற்றிலே உன் சுவாசத்தை...

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில்..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..

பூங்காற்றிலே..

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்ந்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா...

பூங்காற்றிலே..

கண்ணில்..

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் போகும் முன்னே
ஓடோடி வா..
பூங்காற்றிலே..
இப்பாடலின் வீடியோ இங்கே..

4 comments:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

இது போன்று நெறைய எதிர்பார்க்கிறேன்.. உங்களிடம் இருந்து..

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள பிரகாஷ்க்கு,

கண்டிப்பாக தரமுயற்சிக்கின்றேன்...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் என் நன்றிகள்...

Anbinnayagan said...

This blog design and the songs you posted here are very very superb. keep it up..

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள அன்பின்நாயகனுக்கு,

தங்களின் இந்த பக்கத்தின் வருகைக்கும் மற்றும் கருத்திற்கும் என் நன்றிகள் பல...

Post a Comment