நான் தேடும் செவ்வந்தி பூவிது...

படம் : தர்மபத்தினி
இசை : இளையராஜா
பாடியவர்
கள் : இளையராஜா, ஜானகி

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்..

பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி
ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராசாவே நாளாச்சு

நான் தேடும்..

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கு அந்த சுகம் வருமோ
தள்ளாடும் என் தேகம் தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா
ஆ....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும்..




இப்பாடலின் வீடியோ இங்கே..

அந்த நிலாவ தான் நான்

படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
 
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
அந்த நிலாவ தான்..
ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக முந்தியில பந்தி வைக்கவா
மாசத்துல மூணு நாலு பொறுக்கணும் பொதுவாக
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கைஇருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு
அந்த நிலாவ தான்..
வெல்ல வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
கட்டழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சி
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூன்ஜோல
பூவு ஒன்னு கனசச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான்..

ஏதோ நினைவுகள் கனவுகள்..

படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....

ஏதோ நினைவுகள்...
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..




இப்பாடலின் வீடியோ இங்கே..

என் கண்மணி என் காதலி...

படம்: சிட்டுக்குருவி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P. சுசிலா, பாஸ்கர், கோவை பாபு
என் கண்மணி என் காதலி இள மாங்கனிஉனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதேநான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோநீ நகைச்சுவை மன்னனில்லையோநல்லா சொன்னீர் போங்கோ..
என் மன்னவன் என் காதலன்ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோநீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மாபிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மாஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..இளமாலையில்..அருகாமையில்..வந்தாடும் வேளை இன்பம் கோடியின்றுஅனுபவம் சொல்லவில்லையோ..இந்தாம்மா கருவாட்டு கூடை.. முன்னாடி போ..
என் மன்னவன்..
என் கண்மணி..
தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கேட் இறங்கு..மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமேதிருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமேஅதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமேஅடையாளச் சின்னம் அன்று தறவேண்டுமேஇரு தோளிலும் மணமாலைகள்கொண்டாடும் நேரமென்று கூடுமென்றுதவிக்கின்ற தவிப்பென்னவோஎன் கண்மணி..என் மன்னவன்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சங்கீத மேகம்...

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம்..


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா .. (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..


உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே .. (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..



இப்பாடலின் வீடியோ இங்கே..

நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்...

படம் : சில்லுனு ஒரு காதல்
இசை : ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான்வரிகள் : வாலி



நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்,
தனிமை அடர்ந்தது, பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே, நானும் மெழுகுவத்தீயும்
தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ

நியூ யார்க் நகரம்...
 
பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஓரு முத்தம் தந்து, காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை நாவல் எடுக்க நீ இங்கே இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னைத் தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே, நீயும் அங்கே; இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ?
வான் இங்கே, நீலம் அங்கே, இந்த உவமைக்கு இருவரும் விளக்கம் ஆனதேனோ?
நியூ யார்க் நகரம்...
 
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்னத் தேனா?
ஜில் என்று பூமி இருந்தும் இந்தத் தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ?
வா அன்பே, நீயும் வந்தால் செந்தணல் கூடப் பனிக்கட்டி போலே மாறுமே
நியூ யார்க் நகரம்...

இப்பாடலின் வீடியோ இங்கே..