சங்கீத வானில்...

படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை & வரிகள்: S.A.ராஜ்குமார்பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

தோள் மீது வா...உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே..

சங்கீத வானில்...

ஆனந்த ராகங்களில்...நான் ஆலாபனை செய்கிரேன்..
நான் உந்தன் கீதம் தன்னை...ஆராதனை செய்கிரேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே...
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே...
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே...
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

பொன்மாலை வேளைகளில்...உண் வாசல் நான் தேடினேன்
கண்ணென்னும் ஓடங்களில்...கரை தேடி நான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே..
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே..
உன்னில் தினம் உடல் கரைகின்றதே..
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே...
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உண் மஞ்சம் தானே...

சங்கீத வானில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

0 comments:

Post a Comment