ஆறும் அது ஆழம் இல்ல

படம் : முதல் வசந்தம் 
இசை : இளையராஜா  
பாடியவர் : உமா ரமணன்
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா... (2)

மாடி வீட்டுக் கன்னி பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே

ஆறும் அது ஆழம் இல்ல...

தண்ணியில கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா
ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆறும் அது ஆழம் இல்ல...
இப்பாடலின் வீடியோ இங்கே..

9 comments:

angel said...

i havent heard this before.

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள ஏஞ்சல்,

என்ன இப்படி சொல்லிடீங்க... இவ்வளவு பேமசான பாட்டு... பெரியவங்கள யாராச்சும் கேட்டுபாருங்க...

என்ன அற்புதமான வரிகள்...

காதல் சோகத்தின் நிலையை காட்டும் வகையில் இளையராஜாவின் இசையில், சந்திரசேகரின் நடிப்பில் அருமையான பாடல்...

//அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா கெடைக்கும் அய்யா
ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது//

அப்புறம் கூடுதல் தகவல் இது தமிழில் ரம்யா கிருஷ்ணனின் முதல் படம்...

கவிதை காதலன் said...

வாவ்.. என்ன பாட்டு இல்ல... சில சுகமான நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஆமாம் நண்பா... சூப்பர் பாட்டு...

நினைவுகளை சொன்னால் நாங்க தெரிந்துக்கொள்வோம்....

தமிழ்த்தோட்டம் said...

அருமையான பாடல்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டம்,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி.. தங்களின் வருகைக்கு...

செல்வம் said...

இந்த பாடலை எழுதியவர் யார்?

Post a Comment